நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்துக்கழக கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் போக்குவரத்துக்கழக பணியாளகள் 8 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 பேர் காயங்களுடன் மீட்கபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மீட்புபணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சம்பவம் 4.30 மணிக்கு நடந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துக்கழக கட்டடம் மேற்கூரை 100 ஆண்டுகளுக்கு பழமையான கட்டிடம் என கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் பெயர் பெரம்பூரை செர்ந்த முனியப்பன் வயது 40 என தெரியவந்துள்ளது.
இந்த கட்டிடம் விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பணிமுடிந்து அனைவரும் உறங்கிகொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.


(தகவல்: தினத்தந்தி குழுமம்)
Discover more from My TNSTC Blog
Subscribe to get the latest posts sent to your email.