கோவையில் இருந்து ஓசூர் சென்ற அரசுப் பேருந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்ற போது, பேருந்தின் முன்பாக சென்ற போர்வெல் லாரி திடீரென இடப்புறம் திரும்பியது. எதிர்பாராத இந்த நிகழ்வால், அரசுப் பேருந்து லாரியின் பின்புறம் மோதியது. இதில், பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துனர் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் பிரேமா மற்றும் அவரது தாயார் மகேஸ்வரி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில், பிரேமா உயிரிழந்த நிலையில், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து ஓட்டுநர் சின்னராஜ் உட்பட மூவர், ஐ.ஆர்.டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.