விழுப்புரம் அருகே ஏரிக்குள் பாய்ந்த அரசு பேருந்துதிருவெண்ணைநல்லூர்:
திருச்சியில் இருந்து அரசு விரைவு சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்றது. இந்த பேருந்து விழுப்புரம் அருகே திருவெண்ணைநல்லூர்- மடப்பட்டு தேசிய நெஞ்சாலை பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.
சிறிது தூரம் சென்ற பேருந்து சாலை ஓரம் நின்ற மரத்தில் மோதி ஏரிக்குள் பாய்ந்து நின்றது. இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ், தர்மபுரி அருகே ஆவூரை சேர்ந்த பயணி பெருமாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் கிரேன் உதவியுடன் ஏரிக்குள் பாய்ந்த பஸ்சை மீட்டனர்.
Discover more from My TNSTC Blog
Subscribe to get the latest posts sent to your email.